விமானத்தில் ஜன்னல் ஓரம் சீட் சேண்டுமா?.. ரூ.1,500 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் – இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

0
224

இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ விமானம் அதிகளவில் இயங்கி வருகின்றன. மேலும், இந்தியாவில் விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் 60விழுக்காடு பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்த விரும்புகின்றனர்.

இண்டிகோ விமாத்தில் முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், தற்போது இண்டிகோ நிறுவனமானது தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இண்டிகோ விமாத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்லும் பெரிய விமானங்களில் முன் இருக்கைகள் மற்றும் ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர விரும்பும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த கட்டண உயர்வானது உடனடியாக அமலுக்கு வர உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி முன் இருக்கைகளை தேர்வு செய்பவர்கள் வழக்கமான கட்டணத்தில் இருந்து கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.

அதுபோல ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர விரும்பும் பயணிகள் முன் பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என இண்டிகோ விமானம் அறிவித்துள்ளது. இந்தக் கடடண உயர்வானது பெரிய விமானங்களுக்கு மட்டுமே சிறிய ரக விமானங்களுக்கு தற்போதைக்கு இல்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here