‘வேலையில்லாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது?’ – பிரகாஷ் ராஜ் ஆவேசம்..!

0
148

கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், “நம் நாட்டில் சொல்லப்படும் கதைகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும், வேலையில்லாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது” எனக் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of Kerala) கடந்த 8ஆம் தேதி தொடங்கி நேற்று (டிச.15) நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருத்திரனாகக் கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் பிரகாஷ் ராஜ் பேசினார்.

அப்போது பேசிய அவர், “கேரள மக்களின் அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை ஆகியவற்றால் இங்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாகக் கடவுளின் சொந்த நாடாக இருப்பதால், அரசியலிலிருந்து கடவுளை ஒதுக்கி வைக்கிறீர்கள்.

உங்கள் அரசு, சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் இது போன்ற விழாவை நடத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நம் நாட்டில் சொல்லப்படும் கதைகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பல்வேறு கோணங்களில் கதைகள் சொல்லப்படுகின்றன.

உதாரணமாக, நாடாளுமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தில், போராட்டம் நடத்த விரும்பிய ஆறு பேரைப் பற்றிய கதைகளைப் பார்க்கிறோம். மேலும், சண்டையிடும் பத்திரிகையாளர்கள், ஆளுங்கட்சியைக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்க்கட்சியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இருப்பதாகக் கூறும் ஆளுங்கட்சியினர் ஆகியோரைப் பார்க்கிறோம்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்ன என்பதுதான் மற்றுமொரு கதை. அந்த இளைஞர்களை இதைச் செய்ய வைத்தது எது? என்பது குறித்த கதையும் சொல்லப்படலாம். அதே சமயம், வேலையில்லாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது, மணிப்பூரைப் பற்றிய பதில்களைப் பெறாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது, விரக்தியானது என்ற கோணத்திலும் கதை சொல்லப்படுமா?” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here