Uttar Pradesh Tragedy: டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலி..!

0
138

UP Tractor Accident: உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கன்ஜ் மாவட்டம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த டிராக்டர் ஒன்று திடீரென ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களிடம் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கைக்கு புனித நீராட பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

இது குறித்த அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here