20M Subscribers!.. உலகளவில் நம்பர் 1 இடத்தில் பிரதமர் மோடி!..

0
85

Narendra Modi YouTube Channel: பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் இன்று 2 கோடி சப்ஸ்கிரைபர்ஸ் கடந்துள்ளது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் யூடியூப் சேனல்களில் அதிக சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட யூடியூப் சேனல் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.

இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் 4.5 பில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளன. பிரதமர் மோடியின் இந்த யூடியூப் சேனல் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு அடுத்தப்படியாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சேனல் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவரது யூடியூப் சேனலில் மொத்தம் 64 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சேனல் 7.89 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ், துருக்கி அதிபர் எர்டோகனின் சேனல் 3.16 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டுள்ளன. இந்திய தலைவர்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சேனலுக்கு 35 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

இதையும் படிங்க: ‘ஃபாரின் கேர்ளுடன் ஊர் சுற்றிய விஷால்’.. வீடியோ எடுப்பதைக் கண்டு தெறித்து ஓட காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here