உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலை பிரதமர் மோடி நேற்று பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாட்டை தொடங்கி வைத்தார்.
கோவில் திறப்பின் முதல் நாள் நாட்டின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, முன்னனி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியர்ல் பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்று (ஜன.23) முதல் ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மட்டும் சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், சட்ட ஒலுங்கு பிரச்சினை மற்றும் அசம்பாவிதங்களை தடுக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.