‘அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கும்’ – அமித்ஷா பேச்சுக்கு திமுகவினர் விமர்சனம்..!

0
134

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதற்கு, ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ என திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறோம். அதிமுக உடன் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிறைய திட்டங்கள் கட்டாயம் இடம்பெறும். தமிழ் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் கிடைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கொண்ட முயற்சி நல்ல முயற்சியாகும்” என்றார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது குறித்து, பாஜகவிற்கு பாதிப்பா என்ற கேள்விக்கு, “ஜனநாயக நாட்டில் யாரும் புதிய கட்சியை தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். ஆனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என அமித்ஷா பதிலளித்தார்.

இது குறித்து திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, “தமிழ்நாட்டில் அதிமுக, கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன என அமித்ஷா கூறியதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது” என விமர்சித்தார்.

தொடர்ந்து இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “அதிமுக-விற்காக கதவுகள் திறந்துள்ளன என அமித்ஷா கூறியது அவரது நல்ல எண்ணத்தை காட்டுகிறது. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here