‘கர்நாடக முதலமைச்சருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்’ – ஏன் தெரியுமா?

0
92

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது, சந்தோஷ் என்ற ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பதவி விலகக்கோரி 2022ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியது.

இது தொடர்பாக, தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, எம்பி பாட்டீல் மற்றும் காங்கிரஸ் கட்சி ரன்தீப் சிங்சுர்ஜேவாலா ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, அவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும், சித்தராமையா, சிறப்பு நீதிமன்றம் முன்பு மார்ச் 6ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 6, பாட்டீல் மார்ச் 7, ரன்தீப் சுர்ஜேவாலா மார்ச் 16ஆம் தேதி ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here