‘நிதி ஒதுக்குவதில் எந்தவித பாகுபாடும் காட்டவில்லை’ – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

0
65

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, இன்று நடந்த மக்களவையில், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில், மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, “ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல; நிதிக்குழுதான். நிதிக்குழுவும் தாங்களாகவே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை.

அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு அதிகாரிகள் நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். நிதிக்குழு பரிந்துரைப்பதைதான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையைதான் ஒவ்வொரு நிதி மந்திரியும் பின்பற்றுகிறார்கள்.

பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார்போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எந்த வித பாகுபாடும் காட்டவில்லை” என பதிலளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2024-25ஆம் ஆண்டிற்கான ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மேலும், 2023-24ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகள், இரண்டாம் தொகுதியைக் காட்டும் அறிக்கையையும் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here