‘ஜார்க்கண்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு’.. ஹேமந்த் சோரனுக்கு அனுமதி..!

0
94

Hemant Soren: ஜார்க்கண்ட் அரசு மீது நாளை மறுநாள் (பிப்.05) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜன.31ஆம் தேதி இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

பின்னர், அம்மாநில புதிய முதலமைச்சராக சம்பய் சோரன் பதவியேற்றார். அவர் நாளை மறுநாள், சட்டப்பேரவையில் அரசு மீதான பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள ஹேமந்த் சோரன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here