‘நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக INDIA கூட்டணி போராடும்’ – ராகுல் காந்தி..!

0
63

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி, கடந்த ஜன.14அம் தேதி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரையில் நேற்று அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் ராகுல் காந்தி யாத்திரையை மேற்கொண்டார்.

இதற்கிடையே, ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்குவங்கம் வழியாக இருந்தாலும் கூட, இது குறித்து தங்களிடம் காங்கிரஸ் சார்பாக எதுவும் கூறவில்லை என அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ராகுலின் யாத்திரை மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் நுழைந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது, “நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக INDIA கூட்டணி போராடும்.

நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் யாத்திரைக்கு பெயர் வைக்கும் போது, நியாய என்ற வார்த்தையை சேர்த்து வைத்துள்ளோம்” என பேசினார். அதனைத் தொடர்ந்து தனது யாத்திரையை தொடங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here