‘நாங்கள் தனித்தே போட்டியிட்டு பாஜகவை தோற்கடிப்போம்’ – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

0
112

மத்தியில் ஆளும் பாஜவுக்கு எதிராக, 28 கட்சிகள் அடங்கிய, INDIA கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டணியில் ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக, 3௦ ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்குடன் உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் போட்டியிட திரிணமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும், காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகளை தருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘நான் இண்டியா கூட்டணியில் ஒரு அங்கம். ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. காங்கிரசுடன் எந்த உறவும் இல்லை. வரும் தேர்தலில் நான் தனித்தே போட்டியிடுவேன், தனித்தே போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்.

நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை தோற்கடிப்போம்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here