தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.03) டெல்லி செல்கிறார். டெல்லி சென்ற நிலையில் நாளை (ஜன.04) அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து கேலோ இந்தியா போட்டிக்கான அழைப்பிதழை வழங்கவுள்ளார்.
இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வருகிற 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து கலந்துகொள்கின்றனர். இதில், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க: ‘ஆத்தி.. கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா’!.. வடிவேலு பாணியில் படத்தின் அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!..