‘முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்’ – பிரதமர் மோடி..!

0
78

பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முத்ரா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். குறு, சிறு தொழில்முனைவோருக்கு, 10 லட்சம் ரூபாய் வரை, பிணையமில்லாத சிறு கடன்களை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன. இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, தனது ‘X’ தளத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும், இது கோடிக் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, தொழில்முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கருத்தை மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காளி, தெலுங்கு, ஹிந்தி, அசாமி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளில் பதிவிட்டிருக்கிறார். பிரதமரின் இந்த பதிவுக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here