அயோத்தியில் புதிப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

0
142

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, அயோத்தியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள ரயில் நிலையமும் புதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி இன்று (டிச.30) திறந்து வைத்தார். இன்று காலை 10.45 மணியளவில், விமானம் மூலம் அயோத்திக்கு சென்ற பிரதமர் அங்கிருந்து நேராக அயோத்தி ரயில் நிலையம் சென்றார்.

ரயில் நிலையம்வரை உள்ள 15 கி.மீ., தூரமும் வாகன பேரணியாக சென்றார். பிரதமரை சாலையின் இருபுறமும் இருந்த தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி பிரதமர் சென்றார். பிரதமர் சென்ற பாதைகளில் காவல் துறையினர் தற்காலிகமாக மரத்தடுப்புகளை வைத்திருந்தனர்.

பின்னர், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், 2 அம்ரித் பாரத் ரயில்கள், 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அயோத்தி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கு விமான நிலையத்தை திறந்து வைத்த மோடி, விமான நிலையம் அருகே அமைக்கப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

தொடர்ந்து, அயோத்தி நகரில் ரூ.11 ஆயிரம் கோடிகளுக்கான திட்டப்பணிகளையும், பிற மாவட்டங்களுக்கான ரூ.4 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு, ராமர் கோயிலுக்குச் செல்லும் ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராமஜென்மபூமி பாதை ஆகிய நான்கு பாதைகளையும் மோடி திறந்து வைக்கிறார்.

இதையும் படிங்க: “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here