‘பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் பாஜக’ – ராகுல் காந்தி ஆவேசம்..

0
71

பழங்குடியின மக்களை காடுகளுக்குள் அடைத்து வைத்து அவர்களது உரிமைகளை பறிக்கவும், கல்வி கற்பதை தடுக்கவும் பாஜக முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக அசாமில் பயணம் மேற்கொண்டார். அப்போது, மஜூலி என்ற இடத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் உங்களை ஆதிவாசிகள் என அழைக்கிறோம். ஆனால், பாஜக உங்களை வனவாசிகள் என அழைக்கிறது. உங்களை காடுகளிலேயே வைத்திருக்க பாஜக நினைக்கிறது.

உங்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிப்பதையோ, ஆங்கிலம் கற்பதையோ, தொழில் செய்வதையோ பாஜக விரும்பவில்லை. உங்களிடம் இருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் உங்களிடம் வழங்க நாங்கள் விரும்புகிறோம்.

உங்களது நிலம், வனம் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உங்களிடம் வழங்கப்பட்டாக வேண்டும். அதற்கு நாங்கள் சட்டம் இயற்றுவோம்” என ராகுல் காந்தி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here