‘தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி.. விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இல்லை’ – ராகுல் காந்தி கேள்வி..!

0
106

Rahul Gandhi: ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் இன்று (பிப்.,03) காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டார்.

பின்னர், அங்குள்ள வைத்தியநாதர் கோவிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, யாத்திரையின்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி போன்ற தொழிலதிபரின் கோடிக்கணக்கான கடன்களை பாஜக தள்ளுபடி செய்கிறது.

விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள்? நாட்டில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மட்டுமே அநீதி நடைபெறுகிறது.

இந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்குவோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here