‘பிரதமர் மோடி எந்த சாதி தெரியுமா?’ – ராகுல் காந்தி கேள்வி..!

0
134

Rahul Gandhi: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட் மாநிலத்தை கடந்து தற்போது ஒடிசாவில் மேற்கொண்ள்ளப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், “பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓபிசி) பிறந்ததாக நாட்டையே ஏமாற்றி வருகிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை.

பொதுப் பிரிவில் இருந்த ‘தெலி’ சாதியில்தான் மோடி பிறந்தார். தெலி சாதி என்பது மத்திய இந்தியாவில் உள்ள பலரின் குடும்பப்பெயர். 2000ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போதுதான் அந்த சாதியை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் மாற்றினர். இதனை அனைத்து பாஜக தொண்டர்களிடமும் கூறுங்கள்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here