அயோத்திக்கு புறப்பட்ட முதல் விமானம்.. கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்..

0
74

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்பட பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ராமர் கோயிலுக்கு வந்து செல்ல ஏதுவாக அயோத்தியில் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், அயோத்திக்கான முதல் விமானம் குஜராத் மாநிலம அகமதாபாத்தில் இருந்து இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்குச் சென்றன.

மேலும், அயோத்திக்குச் செல்லும் முதல் விமானம் இது என்பதால் பயணிகள், அங்குள்ள ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here