காரில் இளைஞரை படுக்க வைத்து.. இளம்பெண்கள் செய்த அட்டூழியம் ..!

0
162

டெல்லியில் காரின் முன்புற பானட்டில் ஒரு இளைஞரை படுக்க வைத்து இளம்பெண்கள் காரோட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ முதன்முதலில் சச்சின்குப்தா என்பவரது இணையதள பக்கத்தில் வெளியானது. மேலும், அந்த வீடியோவில், காருக்குள் இருக்கும் இரண்டு இளம்பெண்கள் காரை ஓட்டுகின்றனர்.

அப்போது, காரின் பானட்டில் ஒரு இளைஞர் படுத்திருக்கிறார். மேலும் அவர் தனது கைகளை கூப்பி அவர்களிடம் கெஞ்சுவதுபோல இருக்கிறது.

காருக்குள் இருக்கும் பெண்கள் அவர்களுக்குள் ஏதோ பேசுகின்றனர். அந்த இளைஞர் எவ்வளவு கெஞ்சியும் காரை நிறுத்தாமல் பெண்கள் ஓட்டிச் செல்கின்றனர்.

இந்த வீடியோ உண்மையா அல்லது டிரெண்டிங் ஆக்குவதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோவா என்பது தெரியவில்லை. ஆனால். இதன் உண்மை தன்மையை உணர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here