‘அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்’ – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

0
106

உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 200ஆக உயரும். விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீப காலமாக விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இண்டிகோ விமான நிர்வாகம் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 500 விமானங்களை வாங்கியது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here