உத்தரகாண்ட் தொழிலாளர்கள் நிலை:

0
90

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளனர். இதையொட்டி சுரங்கத்திற்கு உள்ளே ஆம்புலன்ஸ்களை எடுத்து சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். 41 தொழிலாளர்களையும் மீட்க ஏராளமான ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள் தயார் நிலையில் எனவே தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வர வேண்டியது தான் மிச்சம். தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களும் அங்கே உள்ளனர். ஒவ்வொரு தொழிலாளரும் முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்காக போக்குவரத்து சரி செய்யப்பட்டு எந்தவித சிக்கலும் இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதே 10 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றி முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னும் எந்த ஒரு ஆம்புலன்ஸும் சுரங்கத்தில் இருந்து வெளியே வரவில்லை. கடந்த 17 நாட்களும் தொழிலாளர்களை மன தைரியத்துடன் வைத்திருப்பது தான் மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. 17வது நாளில் மீட்பு பணிகள்


இதற்காக மனநல மருத்துவர்கள் அவ்வப்போது பேசி அவர்களை இயல்பாக வைத்திருக்க முயற்சித்தனர். பிடித்த விஷயங்கள் என்னென்ன? அடுத்து நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன? வீட்டில் யாருக்கு என்ன தகவல் சொல்ல வேண்டும்? என கேள்விகள் கேட்டு வீட்டிலிருந்து வந்த தகவலை தெரிவித்து நம்பிக்கை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் உடல் ரீதியாக பலத்துடன் இருக்கும் வகையில் சத்தான உணவுகள் சமைத்து உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. கைகொடுத்த 6 இஞ்ச் பைப்
முதல் ஒரு வாரத்திற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஏனெனில் சிறிய குழாயில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சைகள் போன்றவை தான் அனுப்பப்பட்டு வந்தன. அதன்பிறகு 6 இஞ்ச் பைப்பை வெற்றிகரமாக உள்ளே செலுத்தினர். இதையடுத்து எண்டோஸ்கோபி கேமரா மூலம் உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே 6 இஞ்ச் பைப் வழியாக சமைத்த உணவுகள் அனுப்ப தொடங்கினர். மன நல ஆலோசகர்கள் அவ்வப்போது வாக்கி டாக்கி மூலம் பேசி தொழிலாளர்களுக்கு பெரிதும் நம்பிக்கை அளித்து வந்தனர். இத்தகைய விஷயங்கள் தான் 41 பேரையும் நம்பிக்கையுடன் நாட்களை கடக்க பெரிதும் உதவி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here