டிசம்பர் 1ம் தேதி முதல்….ஆவின் டிலைட் பால்.. எவ்வளவு தெரியுமா??? மக்களே!!!!!

0
64

சென்னை: ஆவின் சார்பில் ஊதா நிற அரை லிட்டர் டிலைட் பால் டிசம்பர் 1ம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில் பால்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக மனோ தங்கராஜ் உள்ளார். பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு, குநை்த கொழுப்பு என்ற 3 வகைகளில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவின் நிறுவனம் சார்பில் பச்சை நிற பாக்கெட் பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்துடன் விற்பனையானது. இந்நிலையில் தான் இந்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவும், அதற்கு பதிலாக 1 சதவீத கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதோடு அண்ணாமலை மற்றும் மனோதங்கராஜ் இடையே எக்ஸ் வலைதளத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. அண்ணாமலை கூறுகையில், ‛‛ ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருக்கிறது.கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு” என சாடியிருந்தார்.இதனை முற்றிலுமாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்தார். அவர் கூறுகையில், ‛‛ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டில் இருக்கும் கொழுப்பு என்பது இன்றைய மக்கள் வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இல்லை.

இதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ப கொழுப்பு சத்துடன் கூடிய ஊதா நிற டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது லாப நோக்கமின்றி மக்கள் சேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்நிலையில் தான் இன்று ஆவின் நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ஆவின் ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் என்பது வழங்கப்படும். 3.5 சதவீத கொழுப்புடன் கூடிய இந்த அரை லிட்டர் ஆவின் டிலைட் பால் ரூ.21க்கு விற்பனை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here