திடீரென வந்த விஜயகாந்த் ஆன்மா..! மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிய கேப்டன்.. என்ன நடந்தது?..

0
124

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள் சிலர் வீடியோ மூலம் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கேப்டனின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், அவரது நினைவிடத்தில் மக்கள் தினம்தோறும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத நடிகர்களும் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இந்நாள் வரை கேப்டனின் நினைவிடத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு தேமுதிக சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா, கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.

அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், பிரேமலதாவிடம் சென்று அவரது கையை பிடித்துக்கொண்டு, ‘காசி விஸ்வநாதர் என்னுடைய கனவில் தோன்றி, விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று சங்கு ஊத சொன்னார்’ என தெரிவித்தார்.

அவர் பிரேமலதாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, உடலை முறுக்கி, சட்டென்று விஜயகாந்த் குரலில் பேசத் தொடங்கினார். “நான் எங்கேயும் போகமாட்டேன், நான் உன் இதயத்தில் தான் இருக்கிறேன்” என பேசினார்.

இது குறித்து வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், கேப்டனின் விஜயகாந்த்தின் ஆன்மா தான் பேசியதாக கூறி இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 2ஆம் இடம் பிடித்த வீரர் அமைச்சர் மீது குற்றச்சாட்டு.. என்ன காரணம்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here