IPL 2024 : சென்னை – கொல்கத்தா அணிகள் மோதல்.. டிக்கெட் விற்பனை தொடக்கம்..!

0
89

CSK vs KKR : ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், 2 போட்டிகளில் வெற்றியுடனும், ஒரு போட்டியில் தோல்வியுடனும் அட்டவணையில் 3ஆம் இடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.1700 முதல் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஏப்ரல் 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளை Paytm மற்றும் www.insider.in உள்ளிட்ட இணையத் தளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் சேப்பாக்கத்தில் சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here