‘சாப்பாட்டில் விஷம் கலந்து மனைவியை கொல்ல முயற்ச்சி’ – இம்ரான் குற்றச்சாட்டு..!

0
110

ImranKhan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல்கள் செய்த வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், இம்ரான்கானின் 3ஆவது மனைவி புஷ்ரா பீபி ஊழல் வழக்கு உள்பட 2 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

மேலும், இம்ரான்கானின் வீட்டை கிளை சிறையாக மாற்றி, அதனுள் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஊழல் வழக்கு விசாரணையின்போது சிறையில் உள்ள தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மனைவிக்கு ஏதும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே காரணம் எனவும் இம்ரான்கான் கூறியுள்ளார். மேலும், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவத்தை தனக்கு உணவில் கலந்து கொடுத்ததாக புஷ்ரா பீபியும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தனக்கு கண் வீக்கம், மார்பு வலி, வயிற்று வலிப் போன்றவைகள் ஏற்பட்டிருப்பதாகவும் புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பு குற்றச்சாட்டிற்குப் பின்னால் இருக்கும் உண்மைகள் ஆராயப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here