‘திமுகவுல பிரச்சாரம் செய்ய ஆளில்ல.. அதான் கமல்ஹாசன சேர்த்திருக்காங்க’ – குஷ்பூ..!

0
109

Kushboo: பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல். பா.ஜ.க.-வை சேர்ந்த குஷ்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை குஷ்பூ அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாடாளுமன்றத்தில் போட்டியிடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பூ, “பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நான் நிற்பேன்.

நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய கூறினாலும், முழுவீச்சில் பிரச்சாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என பதிலளித்தார். தொடர்ந்து, திமுகவில் இணைந்த கமல்ஹாசன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் திமுக ஒரு சீட் கொடுத்துள்ளது. திமுக-வில் பிரச்சாரம் செய்வதற்கு ஆள் இல்லை. மேலும், திமுகவுக்கு கமல்ஹாசன் போன்ற பிரபலமான முகம் பிரச்சாரம் செய்ய தேவைப்படுகிறது.

அதை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்திருக்கிறார். அதற்காக தான் அவருக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூட்டுறதுக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கமல்ஹாசன் தேவைப்படுகிறாரா?” என குஷ்பூ பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here