RCB vs LSG : பெங்களூரு அணியை விரட்டியடித்த லக்னோ.. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

0
102

RCB vs LSG IPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 51 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 21 பந்தில் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 40 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. போட்டியின் முடிவில் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியைத் தோற்கடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here