New Year 2024: 2024ஆம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜன.01) சென்னை வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். உற்சவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதேபோல். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள கோயிகளிலும் புத்தாண்டை முன்னிட்டும், வருடத்தின் முதல் நாளில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையிலேயே திரளாள பக்தர்கள் குவிந்துள்ளதால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளன.
இதையும் படிங்க: ‘தளபதி 68’ டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!..