கோவா செல்லும் பிரதமர் மோடி..! ரூ.1330 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க திட்டம்..!

0
66

ஓ.என்.ஜி.சி. கடல் உயிர் வாழ் மையத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை கோவா செல்கிறார். பின்னர், அங்கு இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

அதன்படி, கோவாவில் நாளை ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

தேசிய நீர் விளையாட்டுக் கழகத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், கோவாவின் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார்.

மேலும், ரோஸ்கர் மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாக அரசு ஆள்சேர்ப்பு செய்யப்பட்ட ஆயிரத்து 930 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here