‘உங்களின் கனவே எனது லட்சியம் இது எனது வாக்குறுதி’ – பிரதமர் மோடி உரை..!

0
137

இந்தியாவில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில், 2011ஆம் ஆண்டு முதல் ஜன.25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் வீடியோ காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது மோடி, “இளம் வாக்காளர்களுடன் இருப்பது உற்சாகத்தை தருகிறது. இந்த ஜனநாயக நடைமுறையில் முக்கியமான அங்கமாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள்.

உங்களது ஓட்டானது எதிர்கால இந்தியாவையும், நாட்டின் பாதையையும் நிர்மாணிக்கும் சக்தி பெற்றவையாகும். அடுத்தவரும் 25 ஆண்டுகளில், நாடு மற்றும் உங்களின் எதிர்காலத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். நிலையான அரசு பெரிய முடிவுகளை எடுக்கும். பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை பாஜக அரசு தீர்த்து வைத்தது.

140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன். இந்திய பாஸ்போர்ட் உலகம் முழுவதும் இன்று பெருமையுடன் பார்க்கப்படுகிறது. உலக தலைவர்களை சந்திக்கும் போது, நான் மட்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாக கருதவில்லை.

முன்பு ஊழல், முறைகேடுகள் தலைப்புச் செய்திகளாக வந்தன. ஆனால், இன்று வெற்றிக்கதைகள் குறித்து பேசப்படுகிறது. கடந்த 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

குடும்பத்தினரால் நடத்தப்படும் கட்சிகள், இளைஞர்களை முன்னேறி செல்ல அனுமதிப்பது கிடையாது. அவர்களை உங்களின் ஓட்டுகள் மூலம் தோற்கடியுங்கள். உங்களின் கனவே எனது லட்சியம். இது மோடியின் வாக்குறுதி” என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here