‘பிட்ச் சரியில்லாததால் தோற்றுவிட்டோம்’.. கேப்டன் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்..

0
155

IPL 2024: சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடர் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் எய்டன் மார்க்ரம் 50 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில், சென்னை அணியில் தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “உண்மையாகவே இந்த பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. எதிரணியினர் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எங்களை அதிரடியாக விளையாட விடவில்லை. தொடக்கத்தில் நன்றாக விளையாடிய நிலையில் இறுதியில் சொதப்பிவிட்டோம். இந்த பிட்ச் கருமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளதால் நாங்கள் அது மெதுவாக இருக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்கள் கொடுத்துவிட்டோம். ஒரு கேட்ச்சையும் தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களையும் அதிகமாக கொடுத்துவிட்டோம். கடைசி நேரத்தில் கொஞ்சம் பனி இருந்தது. ஆனால் மொயின் அலி 15 – 16ஆவது ஓவரிலும் நன்றாக பந்து வீசினார். பிட்ச் அதிகமாக மாறியது தான் காரணமாக அமைந்துள்ளது” என்றார்.

கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்தபோதும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பிட்ச் சரியில்லை என கூறியிருந்தார். இந்த முறையும் பிட்ச் மெதுவாக இருந்தது என கூறியுள்ளார். இதனால், சென்னை ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

எந்த பிட்சாக இருந்தாலும் அதெற்கேற்ப பயிற்சி எடுத்து போட்டியில் வெற்றி பெறுவதே வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டு. இப்படி பிட்ச் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெற வேண்டும் அதற்கான பயிற்சியில் ஈடுபடுங்கள், ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here