‘இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே’ – வித்தைக்காரன் ஸ்நீக் பீக்கிற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்..!

0
147

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘வித்தைக்காரன்’ படத்தில் நடிக்கிறார். இதில், சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.

மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு வி.பி.ஆர். இசையமைத்துள்ளார். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது ‘வித்தைக்காரன்’ படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், டிராபிக்கில் சிக்கியுள்ள ஒரு வாகனத்தில் இருந்து பொருளை நடிகர் சதீஷ் திட்டம்போட்டு திருடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஸ்நீக் பீக் வீடியோவில் வெளியான காட்சியில் லாஜிக்கே இல்லாமல் இருப்பதாகவும், அதில் நடக்கும் திருட்டு சம்பவம் நம்பும்படியாக இல்லை எனவும் நெகட்டிவ்வாக கமெண்ட்டுகள் வெளியாகி வருகிறது.

மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் வெளியான இந்த ஸ்நீக் பீக் விடியோவால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், படத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இருந்தபோதிலும், முழு படத்தையும் பார்த்த பின்னரே படம் குறித்த தெளிவான விளக்கம் கிடைக்கும். தொடர்ந்து, சதீஷூக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here