அதிமுக முன்னாள் அமைச்சர் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து???

0
100

சென்னை: அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1991-1996-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 1997-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கை 2014 ஆம் ஆண்டு விசாரித்த சென்னை சிபிஐ. சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேவேளையில் கூட்டு சதி குற்றச்சாட்டில் இருந்து அவர்களை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.


அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைவால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here