‘உதயநிதி நேற்று முளைத்த காளான்.. அவருக்கு வாய்த் துடுக்கு அதிகம்..’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

fhjhjgjhjkhkjhkjkljkl

0
121

Jayakumar Criticized Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்த் துடுக்கு அதிகம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல உதயநிதி ஸ்டாலின் பொறுப்புடன் பேச வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், மத்திய அரசிடம் நிவாரணம் கோரியிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்துதானே பேரிடர் நிதி கேட்கிறோம்’ என காட்டமாகக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதியைக் கடுமையாக விமர்சித்தார். ‘உதயநிதி ஸ்டாலினின் பாஷை சரியாக இல்லை; பொறுப்புடன் பேச வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இதனால், திமுக நிர்வாகிகள் நிர்மலா சீதாராமனைக் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘உங்க அப்பன் வீட்டுப் பணமா?’.. உதயநிதி பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

இந்த நிலையில் தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் வருகை தருகிறார். நிர்மலா சீதாராமன் வருகையும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் ரூ 4,000 கோடி செலவு செய்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேறு ஒன்றைச் சொல்கிறார்.

ஆகையால் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியவேண்டும் என்பதற்காகவே இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதனையேதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘அப்பன் என்பது கெட்ட வார்த்தையா?.. 9 ஆண்டுகால பாஜக ஆட்சியே மிகப்பெரிய பேரிடர்தான்’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

வெள்ளை அறிக்கை கொடுப்பதில் என்ன உங்களுக்குப் பயம்? உண்மையை மூடி மறைக்கத்தான் வெள்ளை அறிக்கை தர மறுக்கிறது திமுக அரசு. தென் மாவட்டங்களில் வாய்க்கால், குளங்களை முறையாகத் தூர் வாரி இருந்தால் இவ்வளவு பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

ஹெலிகாப்டரில் சாப்பாடு போடும் நிலைமை வந்திருக்காது. அமைச்சர் உதயநிதி நேற்று முளைத்த காளான். அவருக்கு வாய்த் துடுக்கு அதிகம். வாய்த் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. ஒரு பொறுப்பா கருத்துகளைச் சொல்ல வேண்டும்.

அந்த பக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த உடனே அப்படியே பல்டி அடிக்கிறார்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘ரூ.4000 கோடி என்னாச்சு?.. உண்மையிலே மக்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறதா?’ – நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here