கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி.. பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாகத் தகவல்!

0
76

K. Chandrashekar Rao: பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்று (டிச.07) இரவு எர்ரவல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவையில் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இதனையடுத்து சந்திரசேகர ராவ் தனது முதலமைச்சர் பதவியைச் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

தற்போது தெலங்கானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி நேற்று (டிச.07) பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது கட்சி தொண்டர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரது நலன் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here