சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த்.. அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!

0
84

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்திற்கு திடீர் சுவாஷ பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாகக் கடந்த மாதம் 18ஆம் தேதி சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மார்புச் சளி, இருமல் இருப்பதன் காரணமாக அவருக்குச் செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் குறித்து தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. தொடர்ந்து, விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விஜயகாந்த் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைத்துறையினரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “மார்புச் சளி, இருமல், உடல்நல பிரச்சினை காரணமாகக் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here