சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை.. பறிபோன அமைச்சர் பதவி..!

0
162

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியை இழந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.

அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்குத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. இதனால், பொன்முடியிடம் இருந்த உயர் கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here