சோனியா காந்தியின் 77ஆவது பிறந்த நாள்.. பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

0
94

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சோனியா காந்தியின் பிறந்த நாள் இன்று (டிச.09) கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி சோனியா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சிறப்பாக வழிநடத்திய பெண் ஆளுமைகளில் சோனியா காந்தி முக்கியமானவர். இந்நிலையில் இன்று அவருக்கு 77ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சோனியா காந்தி பிறந்த நாள் குறித்து பிரதமர் மோடி தனது ‘X’ பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருமதி சோனியா காந்தி ஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் அவர் வாழப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, “அர்ப்பணிப்புள்ள பொதுவாழ்க்கையின் உதாரணமாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில், அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்” எனத் தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, “காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்திக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகத் தைரியம், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தியாகத்துடன் போராடிய அவர் கருணையின் அடையாளமாக இருந்துள்ளார். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here