தேமுதிக பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு: கட்டாயம் விஜயகாந்த் பங்கேற்கிறார்.. தொண்டர்கள் மகிழ்ச்சி!

0
95

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை தேறிவிட்டதாகத் தெரிவித்த மருத்துவமனை, பூரண குணமடைந்து அவர் வீடு திரும்பி விட்டதாக இன்று அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்ற சில மணி நேரங்களிலே ஒரு முக்கிய தகவலைக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற டிச.14ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும், கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here