தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா..! பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு..! விஜயகாந்த்தின் அடுத்த ஸ்டெப் என்ன?

0
94

சென்னையில் இன்று (டிச.14) தேமுதிக தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இன்று விஜயகாந்த் வருவாரா எனத் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் கூட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக அவரது வருகையின்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவர் வருகையின்போது பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், விஜயகாந்த்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரேமலதா, பொதுச் செயலாளராகத் தனது உரையை ஆரம்பித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகைபுரிந்திருந்தனர். பொதுக்குழுவில் கலந்துகொள்ள வருபவர்களுக்குப் பெயர், ஊர், உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here