தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு, ஜன.5ஆம் தேதி பிறந்த நாள் வந்த நிலையில் அவரக்கு தி.மு.க. உறுப்பினர்கள், பிரமுகர்கள், வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் நடிகர் விஜய், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் விஜய், கனிமொழியுடன் செல்போனில் பேசியது குறித்து அவர் கூறுகையில், “எப்போதும் போல் அவர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் அவ்வளவு தான். மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. குறிப்பாக அரசியல் குறித்து எதுவுமே பேசவில்லை” எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் வேறு பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தான் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என கூறியுள்ளார்.