‘பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு நன்றி’ – டிடிவி தினகரன்..!

0
178

பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு நன்றி என டிடிவி தினகரன் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது 60ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்குப் பல்வேறு கட்சி தலைவர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவரது பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோயில்களில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்களை வழங்கினர். இந்நிலையில், டிடிவி.தினகரன் பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது ‘X’ தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், திரைப்பட நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிடிவி.தினகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ‘X’ தளத்தில், “எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் அன்புச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம் ஆகியோருக்கு நன்றி.

திரைப்பட நடிகர் தளபதி விஜய், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத் தம்பி ரவீந்திரநாத், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் D.கணேசன், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர்களுக்கும் நன்றி.

மேலும், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

அரசியல் முன்னேற்பாடுகளில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை திருமாவளவன், அன்புமணி உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது டிடிவி தினகரனுக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here