விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லையா???

0
131

விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மார்பு, சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 14 நாட்களுக்கு அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்கிறார்கள். நவ. 23ஆம் தேதி வெளியிட்ட அந்த அறிக்கையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருந்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2018 ஆம் ஆண்டு கூட அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது கல்லீரல் பிரச்சினைக்கும் தைராய்டு பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது மேலும் அவரால் சரிவர பேச முடியாததால் பேச்சு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்த நாளன்று தனது தொண்டர்களை சந்தித்தார். அவரது உடல்நலத்தை பார்த்த உண்மைத் தொண்டர்கள் கண்ணீர் விட்டனர். அது போல் கடந்த 75 ஆம் ஆண்டு சுதந்திர விழாவின் போதும் கூட தேமுதிக கொடியேற்று விழாவில் போது கூட குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் எப்போது கம்பீரமாக பேசுவார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர். விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீரிழிவு நோய் காரணமாக கால் விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் அறிவுரைபடி விரல்கள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here