‘14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றவர் பிரதமர் மோடி’ – பாஜக புகழாரம்..!

0
112

மாநிலங்களவை உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த பாஜக அமைச்சர், பிரதமர் மோடி 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார்.

டெல்லி: பாஜக குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பாஜகவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் நேற்று (டிச.14) எழுத்து வாயிலாக பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில், “2014ஆம் ஆண்டு முதல் 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றவர் பிரதமர் நரேந்திர மோடி. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான அங்கீகாரமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here