‘2026ஆம் ஆண்டு நான் தான் முதலமைச்சர் ஆவேன்’.. ராதிகா கொடுத்த நம்பிக்கையே காரணம்..

0
132

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய சரத்குமார், வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலில் கட்டாயம் நான் முதலமைச்சர் ஆகிவிடுவேன் எனக் கூறியிருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் நேற்று (டிச.11) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத்குமார், “அரசியலிலிருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. அரசியலில் நான் ஈடுபடுவதால் என்னை வீட்டில் தடுப்பவர்கள் யாரும் இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர் வழித்தடங்களைச் சரியாகச் செயல்படுத்தவில்லை. அவர்கள் மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும்.

இதனைச் செய்திருந்தால் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஜனநாயகம் எல்லாம் மாறிவிட்டது. அதற்குப் பதில் பணநாயகம் வந்துவிட்டது. பணத்தால் அரசு நடத்தும் நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஜனநாயகம் மலரும்.

உலகளவில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளதற்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை. வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று கட்டாயம் தமிழ்நாடு முதலமைச்சராக நான் பதவியேற்பேன்.

திராவிட இயக்கங்களின் ஆட்சி மேலும் தொடர்ந்தால் 10 ஆண்டுகளில் தமிழ் மக்களை விரட்டியடித்து விட்டு, வட இந்தியர்களை வரவழைத்து வாக்களிக்க வைத்து அவர்களே வெற்றியும் பெற்றுவிடுவார்கள். இலவசங்களைத் தவிர்ப்பதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும். சென்னை மக்களுக்கு அரசு நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்காது” என்றார்.

தொடர்ந்து பேசிய சரத்குமார், “அண்மையில் எனது மாமியார் கீழே விழுந்துவிட்டார், அவரை பார்த்து நலம் விசாரிக்கச் சென்றேன். அப்போது அவர் ‘உன்னை எப்போது முதல்வராகப் பார்க்கப் போகிறேன்’ எனக் கேட்டார். அவருக்கு 85 வயதாகிவிட்டது. வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள்தான் முதலமைச்சர் என எனது மனைவியும் சொல்லிவிட்டார்.

முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை மற்றவர்களுக்கு இருக்கும்பொழுது எனக்கு வரக் கூடாதா? மற்றவர்களுக்கு இந்த ஆசை வந்தால் சீரியஸாம்.. எனக்கும் அந்த ஆசை வந்தால் நகைச்சுவையாக இருக்கிறதா?.. எனது மனசு சுத்தம். அதிகமாக உழைப்பவன், சரத்குமார் சொல்லிவிட்டார் நாளை அமைச்சர் ஆகிவிடுவார் என நினைக்காமல் ஆக்கிவிடுவோம் என நினையுங்கள், அதற்காக மன தைரியத்துடன் உழைத்து முன்னேறுங்கள்” எனத் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here