ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
97

HBD Rajini: திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்த நாளை இன்று (டிச.12) கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறியும் வருகின்றனர்.

இதனால், ட்விட்டரில் #Thalaivar170, #HBDSuperstarRajinikanth போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது. அதேபோல பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ பக்கத்தில் ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், “அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here