‘தளபதி’யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் ‘புரட்சி தளபதி’..!

0
90

Actor Vishal: நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவுள்ளதாக கூறியிருக்கிறார். விஜய்யின் இந்த அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வரவேற்றாலும், சிலர் விஜய்யை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

கட்சியின் பெயரை மட்டும் அறிவித்ததற்கே ‘தமிழக வெற்றி கழகம்’ தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவைகளுக்கு எல்லாம் விஜய் எவ்வாறு பதில் அளிக்க இருக்கிறார் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தளபதி விஜய்யை தொடர்ந்து புரட்சி தளபதி விஷாலும் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

முன்னதாக சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது.

தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயரில் மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார்.

வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள ரசிகர்களை சந்தித்து, கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஷால், அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் விஷாலின் கட்சி போட்டியிடப்போவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை தொடர்ந்து, விஷாலும் கட்சித் தொடங்கவுள்ளதால், விஷால் கட்டாயம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here