‘ராமர் கோவில் குறித்து உதயநிதிக்கு என்ன தெரியும்?’ – அண்ணாமலை கேள்வி..

0
81

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறுகையில், “உதயநிதி ஸ்டாலினின் நெறியாளர் சந்திப்பு என்பது ஒரு ‘Friendly Match’. அதில் எந்த கேள்வியும் சீரியஸாக இல்லை. எந்த பதிலும் சீரியஸான பதிலும் இல்லை. அதற்கு நாங்கள் பதில் சொல்லி தரம் தாழ்த்திக்க விரும்பவில்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதனை பாஜக பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு உதாரணம். அதை உயதநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து சீடி போட்டு பார்க்க வேண்டும். என்ன கேள்வி கேட்குறாங்க, தமிழ்நாட்டின் பிரச்சனை என்ன? அதை எப்படி பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கையாள்கிறார்கள் என உதயநிதி பார்க்க வேண்டும்.

சில பேர் தேவையில்லாமல் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் என கூறுகிறார்கள் அதற்கு உதயநிதியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த விவகாரத்தை ஆரம்பித்து வைத்தது திமுக அமைச்சர்கள் தான்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வந்தால் மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனை அறிந்துகொண்டு நீங்கள் இப்போது பல்டி அடித்துவிட்டீர்கள்.

மத வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு பற்றி பேசுவதற்கு கடைசி தகுதி கூட திமுகவிற்கு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு கோவில்களை இடித்தார்கள்? மக்கள் குரல் எழுப்பிய பிறகு கோவில் இடிப்பை நிறுத்தி வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் இருதரப்புக்கும் நியாயம் கொடுக்கப்பட்டு இருக்கு. ராமர் கோவிலுக்கு ஒவ்வொரு மனிதனும் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நபர் ராமர் கோவிலுக்கு ரூ.25 கோடி கொடுத்துள்ளார்.

இந்திய அளவில் தமிழகம் 3ஆவது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம். உதயநிதிக்கு என்ன தெரியும்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பற்றி தெரியுமா?” என கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here