‘சென்னையை மோடியின் கையில் ஒப்படைக்க வேண்டும்’ – அண்ணாமலை!

0
116

‘Annamalai’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் பொதுக்கூட்டம் நேற்று கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என சாமானிய மக்கள் விரும்புகின்றனர்.

இந்தியாவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தலைநகரங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பார்த்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மூன்று தொகுதிகளில் திமுக குடும்ப ஆட்சி மட்டுமே நடத்தி வருகிறது.

இதனால், அவர்களுக்கு சாமானிய மக்களின் வலிகள் தெரிவதில்லை. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சென்னையில் போதுமான அளவு இல்லை. சென்னையில் வாழ மக்கள் இன்னும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மாநகரை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். சென்னையை உலகத்தரம் வாய்ந்த மாநகரமாக உருவாக்க மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றுள்ளது. அயோத்தி ராமர் கோவிலுக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஏற்படுகிம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here