நடிகர் விஜய் நேற்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய கமல்ஹாசன், ‘கட்சி தொடங்கிய முடிவுக்கு பாராட்டுகளும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்க உள்ள முடிவுக்கு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘Family Star’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!